கொழும்பிற்கு மீண்டும் வருவாரா மகிந்த! மொட்டுக் கட்சி பதில்
தங்காலை, கால்டன் இல்லத்தில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கொழும்பில் மீண்டும் குடியேறுவதற்கு இதுவரையில் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(15) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மொட்டுக் கட்சி
"சந்திப்புகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காகக் கொழும்பு வர நேரிட்டால் மகிந்த ராஜபக்ச வருவார். பிறகு அவர் ஊருக்குத் திரும்புவார்" என்றும் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் கடந்த ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கமைய, மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து 11ஆம் திகதி வெளியேறியமை குறிப்பிட்டத்தக்கது.



