தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்க நேரிடும்! - பொதுச்சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை
தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
களத்தில் பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவது குறித்து சரியான விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரினதும் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து இன்று அறிவித்தல் ஒனறு வெளியிடப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார சேவையில் முன்னரங்கப் பணியாளர்களாக கடமையாற்றி வரும் பணியாளர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அபாயங்களை எதிர்நோக்கி வரும் களப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்காது அரச மருத்துவ அதிகாரிகள் சங்க குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்குவது கண்டிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.