ஐபிஎல் போட்டிகள் முழுமையாக நிறுத்தப்படுமா..! ஆராயும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை
இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, ஜம்மு மற்றும் பதன்கோட்டில் மேற்கொள்ளப்படும் என்று விடுக்கப்பட்ட விமானத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது,
இந்தநிலையில்; இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றமையால், ஐபிஎல்லின் முழு போட்டிகளும் இரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 80 சதவீத இரசிகர்கள்
போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களால் பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, திடீரென்று மின்சார விளக்குகள் அணைந்தன.
இதனையடுத்து, அணிகளின் வீரர்களும் பார்வையாளர்களும் பாதுகாப்பு கருதி மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த மைதானத்தின் கொள்ளளவு 23,000 பேர் என்ற நிலையில், வெளியேற்றப்பட்டபோது சுமார் 80 சதவீத இரசிகர்கள் அங்கு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
