உயிர்த்த ஞாயிறு தீர்ப்பின் பின் கோட்டாபய கைதாவாரா..! அநுரவின் அரசியல் நாடகம் அம்பலம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரியாக கோட்டபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டாலும், அவர் தண்டிக்கப்படமாட்டார் என்றும், 2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச ஆட்சியைப் பிடித்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் அரசியல் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளர் தி. திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2029ஆம் ஆண்டு ஆட்சியை நாமல் ராஜபக்ச பிடித்துவிடுவார் என்ற பயத்தினாலேயே இந்த அரசியல் நாடகம் இடம்பெறுகின்றது. தற்போது குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள், அரசாங்கம் மாறும் பொழுது பொதுமன்னிப்பில் வெளியில் வரலாம்.
கடந்த 75 வருடங்களாக இலங்கையில் இப்படியொரு கலாசாரமே இடம்பெற்று வருகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கோட்டாபய ராஜபக்ச அடையாளப்படுத்தப்பட்டாலும், அவர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படமாட்டார்.
அவர்களைத் தண்டிக்கும் அளவுக்கு அநுர அரசாங்கம் பலமானதாக நான் பார்க்கவில்லை. ஊழல் குறையவில்லை, மாறாக நாட்டில் பல பகுதிகளில் ஊழல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது என்றார்.
இதுபோன்று, நாட்டில் நடக்கும் விடயங்களை சமூக செயற்பாட்டாளர்கள், தலைவர்கள், அரசியல் நலன் விரும்பிகள் வாயிலாக உங்கள் பார்வைக்குக் கொண்டு வரும் ஊடறுப்பு நிகழ்ச்சி,
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam