மீண்டும் தமிழரசுக் கட்சியில் இணைந்தாரா அரியநேத்திரன்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அக்கட்சியை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில் அவரை இலங்கை தமிழ்ரசுக்கட்சி நீக்கியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக அவர், அம்பிளாந்துறை வட்டாரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.
ஐனாதிபதி தேர்தல்
ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய அரியநேத்திரன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.
வடக்கு, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் யாழில் இரண்டாம் இடத்தையும் ஏனைய மாவட்டங்களில் மூன்றாம், நான்காம் இடங்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.
ஒப்பீட்டளவில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகளை அவர் பெற்றிருந்தார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் வடக்க, கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றார்.
இது ஜனாதிபதி தேர்தலில் செல்லுபடியான வாக்குகளில் 1.70 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |