ஐரோப்பாவில் காட்டுத்தீ அபாயம்: ஐ.நா எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமான காட்டுத்தீ அபாயங்களைச் சந்தித்து வருவதாகவும், ஆனால் அத்தகைய பேரழிவுகளை எதிர்கொள்ள அந்த நாடுகள் இன்னும் "தயார் நிலையில் இல்லை" என்றும் புதிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பாவின் தெற்குப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருவதால், காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
2026ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையின்படி, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பாவில் தீ விபத்துகளால் அழிக்கப்பட்ட காடுகளின் பரப்பு பல லட்சம் ஹெக்டேயர்களைத் தாண்டியுள்ளது.
காட்டுத்தீ
இந்த அறிக்கையில், குறிப்பாக கிரீஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தத் தேவையான நவீனத் தொழில்நுட்பங்கள், போதுமான தீயணைப்பு விமானங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் பெரிய இடைவெளி இருப்பதாகக் குறை கூறப்பட்டுள்ளது.
தற்காப்பு நடவடிக்கை
வெறும் தீயணைப்புப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், காடுகளைப் பராமரித்தல் மற்றும் தீ பரவாமல் தடுப்பதற்கான நில முகாமைத்துவ முறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

காடுகள் அழிவது உலக வெப்பமயமாதலை மேலும் தீவிரப்படுத்தும் என்பதால், ஐரோப்பிய நாடுகள் உடனடியாகத் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், வரும் கோடைக் காலங்களில் மனித உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் தவிர்க்க முடியாததாகிவிடும் என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam