தொடர்ச்சியாக காட்டுயானைகளின் அட்டகாசம்: விவசாயிகள் வெளியிட்டுள்ள கவலை
தேற்றாத்தீவு, மாங்காடு பகுதிகளை கடந்து செட்டிபாளையம், குருக்கள்மடம் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் புரிந்துள்ளன.
குறித்த சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளதுடன், குறித்த யானைகளை அப்புறப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.
காட்டு யானைகள் துரத்தும் பணியை வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தொடர்ந்தும் இரவு 11.30 மணிவரை முன்னெடுத்துள்ளனர்.
யானைகளை துரத்தும் நடவடிக்கை
யானைகளை துரத்தும் நடவடிக்கையில் பல்வேறு சிக்கல் நிலவியுள்ளதுடன், பயந்த நிலையில் அவை வெவ்வேறு திசையில் திரிந்ததாக வெல்லாவெளி பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கூறியுள்ளனர்.
இக்காட்டு யானைகள் கூட்டம் தொடர்ச்சியாக பல்வேறு பயன் தரும் மரங்களையும், விவசாய நிலங்களையும் அழித்துள்ளமை தமக்கு வேதனையளிப்பதாகவும் தமது பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



