காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் வாழ்வாதாரத்தை இழக்கும் கொழுத்துபுலவு மக்கள்
காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் கிளிநொச்சி (Kilinochchi) - கொழுத்துபுலவு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் வாழ்வாதாரம் யானைகளினால் அழிக்கப்படுவதால் அப்பகுதியில் வாழும் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
தமது ஜீவனோபாயத்துக்காக விவசாய செய்கையினை மேற்கொண்டு வரும் அப்பகுதி மக்களின் தென்னை, வாழை மற்றும் பூசணி போன்ற பயிர்களை, யானைகள் அழித்து வருகின்றது.
யானை வேலி
நேற்று இரவும் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த ஆறு காட்டு யானைகள் 120இற்கும் மேற்பட்ட வாழைகள் மற்றும் 50இற்கும் மேற்பட்ட தென்னைகளை அழித்துள்ளது.
குறித்த பாதிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், நிரந்தரமான யானை வேலி ஒன்றை அமைத்துத் தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |