போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு படையெடுத்துள்ள காட்டு யானைக் கூட்டம்
புதிய இணைப்பு
மட்டக்களப்பு - போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் உள்ள நவகிரி 38 கிராமத்தில் யானைகள் கூட்டமாக படையெடுத்துள்ளன.
குறித்த காட்டு யானைகள் இன்று(08.02.2024) காலை வகுகை தந்துள்ளன
நவகிரி பகுதிக்கு வருகை தந்த குறித்த காட்டு யானைக் கூட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் நாசம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரசேத்தின் அண்மித்ததாகவுள்ள சிறிய பற்றைக் காட்டுப்பகுதியில் இக்காட்டுயானைகள் தங்கியுள்ளதால், வேளாண்மை அறுவடை காலங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே செயற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு காட்டு யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளது.
பத்து யானைகள் அடங்கிய குறித்த யானைக் கூட்டம், இன்றையதினம் (07.02.2024) புதன்கிழமை காலைவேளையில் அப்பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ளது.
அதேவேளை, அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களை துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மக்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மேலும், இக்காட்டுயானைகள், பற்றைக் காட்டுப்பகுதியில் தங்கியுள்ளதால் அப்பகுதியில் வேளாண்மை அறுவடை வேலைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் தொழிலாளர்களும் பெரும் அச்சத்தின் மத்தியில் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
@tamilwinnews போரதீவுப்பற்றில் படையெடுக்கும் காட்டு யானைகள் #Lankasrinews #Tamilwinnews #Elephants #Srilanka #Baticaloa ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
இதனால், இந்த காட்டு யானைகளை அப்புறப்படுத்துவதற்கு வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள
அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலப் பிரச்சினை
அதற்கமைய, யானைகளை, பகல் நேரங்களில் அப்புறப்படுத்த முடியாது எனவும் அவற்றை இரவு வேளையில் வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெல்லாவெளி காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மிக நீண்டகாலமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு அப்பகுதி மக்கள் முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |