வாக்குச்சாவடிக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய காட்டு யானை.. பதறி ஓடிய மக்கள்
இந்தியாவின் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டமன்ற வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் காட்டு யானை புகுந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் இடம்பெற்று வருகின்றது.அதன், முதற்கட்டமாக இன்று 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
முதற்கட்டத் தேர்தலில் சுமார் 3.60 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய சுமார் 2.5 இலட்சம் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
தாமதமான வாக்குப்பதிவு
இந்நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருந்துள்ளனர்.
🚨Video from Jhargram, Bengal where an elephant 🐘 today came to a polling booth in a village.😂
— Amitabh Chaudhary (@MithilaWaaala) April 23, 2026
After Modi ji visited Jhargram, even elephants are coming out to vote in this Bengal election🙏 #BengalElections #BengalRejectsMamata #Elephant #VotingDay #Vote #BJP4Bengal pic.twitter.com/50fogwIGkT
அப்போது திடீரென அருகிலிருந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று வாக்குச்சாவடி வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. யானையைக் கண்டதும் வரிசையில் நின்ற வாக்காளர்கள் அச்சமடைந்து நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
இதனால் அந்த மையத்தில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமை சீரானதைத் தொடர்ந்து, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியுள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த சட்டமன்ற தேர்தல் சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
வாக்காளப் பெருமக்களே..! விறுவிறுப்பான தேர்தலுக்கு மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவு
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri