திருகோணமலையில் அதிகரித்துள்ள காட்டு யானை தாக்கம்
திருகோணமலை (Trincomalee) - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சிரிமங்களபுர மெதகம கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் வீடொன்று சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவமானது, நேற்று இரவு (25.06.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, காட்டு யானை தாக்கியதில் வீடு மற்றும் வீட்டிலிருந்த உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளிடம் கோரிக்கை
இந்நிலையில், இந்த காட்டு யானையின் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, இவ்வருடத்தில் மாத்திரம் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சேதமாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அது மாத்திரமன்றி, கடந்த வாரம் 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, காட்டு யானை தொல்லையில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு அப்பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam