நெருக்கடியான நேரத்தில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த முக்கிய உத்தரவாதம்

Shehan Semasinghe IMF Sri Lanka Economy of Sri Lanka
By Vethu Jun 26, 2024 02:37 PM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கை தனது கடனில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை மறுசீரமைப்பதற்காக சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனான கடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். 

“இந்த நடவடிக்கை நாட்டின் நிதி சவால்களை நிர்வகிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த கடன் மறுசீரமைப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அதன் கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு முக்கியமான படியாகும்” என மேலும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

நெருக்கடியான நேரத்தில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த முக்கிய உத்தரவாதம் | Sri Lanka Reaches Usd 5 8 Bn Of Debt Imf Loan

இலங்கை வங்குரோத்து அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கையானது ரணில் அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நெருக்கடியான நேரத்தில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த முக்கிய உத்தரவாதம் | Sri Lanka Reaches Usd 5 8 Bn Of Debt Imf Loan

முதலாம் இணைப்பு

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் கழக கூட்டத்தின் போது கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு

இந்த நிலையில் இலங்கை மற்றும் சீனா இடையிலான இருதரப்பு கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான நேரத்தில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த முக்கிய உத்தரவாதம் | Sri Lanka Reaches Usd 5 8 Bn Of Debt Imf Loan

கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா, ஜப்பான் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கைய எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வு காண இது முக்கிய திருப்புமுனையாக அமையும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US