திருகோணமலையில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம்
திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி அகஸ்தியஸ்தாபனம் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்
பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை சிவசம்பு (வயது 63) என்பவரே படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இரவுநேர காவலுக்காக சென்றவருக்கு நேர்ந்த கதி
குறித்த நபர் சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கங்குவேலி – படுகாட்டுப் பகுதியில் மேற்கொண்டுவரும் வயலுக்கு இரவுநேர காவலுக்காக சென்றிருந்தபோதே யானையின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ -கோமரங்கடவல பகுதிகளில் இதுவரை ஒரு
வருடத்திற்குள் ஆறு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



