புத்தளத்தில் காட்டு யானைத் தாக்குதல்: மக்கள் கவலை
புத்தளம் கருவலகஸ்வெவ தேவநுவர பகுதியில் காட்டு யானையொன்று கிராமத்திற்குள் உட்புகுந்து மரங்களை அழித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
குறித்த யானை, நேற்று (03.03.2024) இரவு கிராமத்திற்குள் உட்புகுந்துள்ளதாக அப்பகுதி மக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட தேவனுவர பகுதியில் நேற்று இரவு காட்டு யானையொன்று மின்சார வேலியை உடைத்துக் கொண்டு ஒருவருடைய வீட்டுத் தோட்டத்திற்குள் உள்நுழைந்து தென்னை மற்றும் வாழை மரங்களை அழித்துள்ளது.
மக்கள் கோரிக்கை
இந்நிலையில், இந்த யானையை விரட்டுவதற்கு முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த பகுதியில் இரவு பகலாக காட்டு யானைகள் கிராமத்திற்குள்
சஞ்சரிப்பதாகவும் இதனால் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், காட்டு யானைகளை காட்டினுல் விரட்டி இதற்கான உரிய தீர்வைப் பெற்றுத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |