காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் படுகாயம்
அம்பாறை - மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிப் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(02.10.2026) அதிகாலை கிட்டங்கி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
காட்டுயானை நடமாட்டம்
நற்பிட்டிமுனை - சேனைக்குடியிருப்புப் பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கிச் குறித்த மாணவன் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே, வீதிக்குக் குறுக்கே வந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலில் காயமடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிட்டங்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய கிராமப்புற வீதிகளில் அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதனால், அப்பாதையைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாஷிங்டனில் ரசாயன ஆயுதத் தாக்குதலுக்குத் திட்டமிடும் ஈரான்: சுட்டிக்காட்டும் அமெரிக்க உளவுத்துறை News Lankasri
Bigg Boss 10: நீயும், உன் கூட்டமும் முடிந்தால் என்னை அடிச்சி பாருங்கடா? டிடிஎஃப்-ஐ வைத்து மக்களை நேரடியாக தாக்கிய ஜேசன் Manithan
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam