சஜித் அணியிலிருந்து விலகுகின்றார் விஜயமுனி! சுயாதீனமாகச் செயற்பட முடிவு
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தீர்மானித்துள்ளார்.
தனக்கு இன்னும் அமைப்பாளர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை என்றும், கட்சி உறுப்புரிமை மட்டுமே உள்ளது என்றும், தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளேன் என்றும் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைச்சுப் பதவி வகித்த விஜித் விஜயமுனி சொய்சா, அதன்பின்னர் மைத்திரி தரப்புடன் இணைந்தார்.
பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் அவர் போட்டியிட்டார்.
எனினும், நாடாளுமன்றம் தெரிவாகவில்லை. இந்நிலையிலேயே அவர் சுயாதீனமாகச் செயற்படும் முடிவை எடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri