சிறுமிக்கு நீதியான விசாரணை வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை
இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சிறுமி வைசாலியின் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றையதினம் (06.09.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் மன வேதனையை தருகிறது.
சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்
நான் நீதிபதியாக செயற்பட்டவன் என்ற நீதியில் விசாரணை முடிவுறாமல் இவர்கள் தான் குற்றவாளி எனக் கூற முடியாது.
தாதியர்களின் தவறே சிறுமியின் கை துண்டிக்க பிரதான காரணம் என செய்திகள் வெளியாகிய நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சிறுமி தனது கல்விக்காலம், திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
