யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெறும் போராட்டத்தில் பதற்றம் (Photos)
யாழ். போதனா மருத்துவமனையில் 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி போராட்டமொன்று நடைபெற்று வருகின்றது.
வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் பதற்றம்
மேலும், சம்பந்தப்பட்ட தாதியை பணி நீக்கம் செய், பணிப்பாளரே விசாரணைகளை மூடி மறைக்காதே உள்ளிட்ட கோஷங்கள் இதன்போது எழுப்பபட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மகஜரொன்றை கையளிப்பதற்கு பொதுமக்களிடமும் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்றுவருகிறது.
குறித்த போராட்டத்தில் சிறுமியின் உறவினர்களுடன் அரசியல் தரப்பினர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்துகொண்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ். போதனா வைத்தியசாலையில் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி வைத்தியசாலை முன்றில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சமூக மட்ட சிவில் அமைப்பினரால் இன்று (07.09.2023) காலை 9.30 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாதியரின் அசமந்தப் போக்கு
மேலும் தெரியவருகையில், கடந்த வாரம் யாழ்.போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது.
இந்த செயற்பாடு தாதியரின் அசமந்தப் போக்கு காரணமாகவே இடம்பெற்றது என்றும் இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருவதுடன், இந்த விடயம் இலங்கையின் நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி தற்போது யாழ். போதனா
வைத்தியசாலை முன்றில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சமூகமட்ட சிவில் அமைப்பினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
