ஐ.நா உயர்ஸ்தானிகருக்கு சென்ற அரசின் போலி தகவல்களுடனான கடிதம் - விக்னேஸ்வரன் ஆதங்கம்
ஐ.நா உயர்ஸ்தானிகருக்கு, இலங்கை அரசாங்கத்தால் போலி தகவல்களுடன் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடங்கியுள்ளன.
இந்த நிலையில், உண்மையான நிலைமைகள் குறித்த தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகருக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளது.
போரின் இறுதி நாளில் 14000 பேர் மாத்திரமே இறந்தார்கள் என்பது உள்ளிட்ட உண்மைக்கு புறம்பான பல கருத்துகள் அரசாங்கத்தின் அறிக்கையில் உள்ளடங்கி இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
