யாழ்.பிரபல வர்த்தகரின் மனைவி உயிரிழப்பு:பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்-செய்திகளின் தொகுப்பு
கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு வீடொன்றில் 6வது மாடியில் இருந்து கீழே விழுந்து 26 வயதான இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் மனைவி என கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள லேன்ட் மார்க் தொடர்மாடி குடியிருப்பில் நடந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 26 வயதான இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை பெண்ணின் முதல் கணவர் இங்கிலாந்தில் லண்டன் நகரில் வசித்து வந்த நிலையில் கோவிட் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த பின்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரை பதிவு திருமணம் செய்து கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
