தென்னிலங்கையில் கணவன், காதலி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட மனைவி
தென்னிலங்கையில் திருமணத்திற்கு புறம்பான உறவினை கொண்டிருந்த கணவன், மற்றும் காதலியை தாக்கிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுக்கை பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான மனைவி, தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய பின்னர் பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
காயமடைந்த கணவனும் அவரது காதலியும் பாதுக்கை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.