கங்குலியின், பெண்கள் தொடர்பான கருத்து சர்ச்சையில்
இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலி, பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.
“மனைவியையும் தோழியையும் விட வாழ்வில் மன அழுத்தங்கள் என்று ஒன்று இல்லை” என்று அவர் கூறிய கருத்தே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
நகைச்சுவையாக அவர் கூறிய கருத்து தொடர்பில் பலரும் எதிர்க்கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நிகழ்வு ஒன்றின்போது, இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோஹ்லி நீக்கப்பட்டமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருந்த கங்குலி, விராட் கோஹ்லியை பிடிக்கும். எனினும் அவர் அதிகமாக சண்டையிடுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் மன அழுத்தங்கள் தொடர்பாக கேட்ட கேள்வி ஒன்றுக்கு கங்குலி நகைச்சுவையாக வெளியிட்ட பதிலே தற்போது சர்ச்சையை ஏற்படு்த்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam