விடுதலைப்புலிகள் போரில் ஒழிக்கப்பட்ட பின்னர் எதற்காக இந்த போராட்டங்கள்! விமல் கேள்வி-செய்திகளின் தொகுப்பு
தமிழர்களுக்கு தாயகம் வேண்டும் என்று போராடிய விடுதலைப் புலிகள் போரில் ஒழிக்கப்பட்ட பின்னர் என்ன நோக்கத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் போராட்டத்தின் பின்னால் உள்ள சர்வதேச நாடுகள் எவை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் பேரணிக்கு புலம்பெயர்நாடுகளில் இருந்து நிதியுதவிகளை வழங்குபவர்கள் யார்? அன்றாட கருமங்களில் இருக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வீதிக்கு அழைத்து வந்தவர்கள் யார்? என்பது தொடர்பில் அரச புலனாய்வுத்துறையினர் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான போராட்டங்களும் பேரணிகளும் நாட்டை வன்முறைக்களமாக்கி மீண்டும் இருண்ட யுகத்துக்கே கொண்டு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கமும் அதிகாரத்தில் இருப்பவர்களும் அதிக கவனம் எடுக்கவேண்டும் என்றும் விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
