பெண் அதிகாரியை தடுத்து வைத்து பரபரப்பை ஏற்படுத்திய சுகாதார ஊழியர்கள்
மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதேச செயலாளர் கௌசல்யா குமாரியை வைத்தியசாலையின் ஊழியர்கள் சத்திரசிகிச்சை அறையில் தடுத்து வைத்தமையால் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொலிஸார் தலையிட்டு அவரை சிகிச்சைக்காக மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஊழியர்களின் பிடியில் சிக்கிய பெண் அதிகாரி
பிரதேச செயலாளரை தடுத்து வைத்து விட்டு, போதிய எரிபொருள் வழங்கப்படவில்லை எனக் கூறி வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எப்படியிருப்பினும் சுமார் ஒரு மணித்தியாலம் சத்திரசிகிச்சை அறையில் சிக்கியிருந்த பிரதேச செயலாளரை மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஜி.சந்திரசேன, மாத்தறை தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் மீட்டு வைத்தியசாலையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் அவர் மாத்தறை கூட்டுறவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
