அரசாங்கம் ஏன் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என மரிக்கார் கேள்வி !
அரசாங்கம் எதனால் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உலக சந்தையில் குறைவடையும் தொகை யாருடைய சட்டைப் பைக்கு செல்கின்றது என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதம் எரிபொருட்களின் விலைகளில் அரசாங்கம் மாற்றம் செய்யவில்லை எனவும் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால் இலங்கையில் விலை குறைக்கப்படாவிட்டால் அது அவரின் சட்டைப் பைக்கு செல்கின்றது இவரின் சட்டைப் பைக்குள் செல்கின்றது என தேசிய மக்கள் சக்தியினர் குற்றம் சுமத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு எரிபொருள் லீற்றரிலும் 50 ரூபா தரகு பெறப்படுவதாகவும் ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை நிறுத்துவதாகவும் தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகள் அற்ற அரசாங்கத்தினால் உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது இலங்கையில் எரிபொருட்களின் விலைகளை எதனால் குறைக்க முடியவில்லை என எஸ்.எம். மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam