ஜனாதிபதி ரணிலின் நடவடிக்கை! இலங்கை சந்திக்கும் டொலர் பிரச்சினைக்கு கிடைக்கவுள்ள தீர்வு...
6 சர்வதேச புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சி ஆட்சிக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இருக்கலாம் என சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வகட்சி அரசில் இணைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி அரசு

தடை நீக்கப்பட்டுள்ள அமைப்புக்களின் வெளிநாடுகளில் விடுவிக்கப்படாத மில்லியன் கணக்கான டொலர் நிதியை வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடிய திறன் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்ய முடிந்தால் இலங்கை எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும். ஆனால் அப்படி நடக்குமா என தன்னால் கூற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகரிக்கவுள்ள டொலர் வருகை

எப்படியிருப்பினும் அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கையின் டொலர் நெருக்கடியை புலம்பெயர் தமிழர்களுக்கு சொந்தமான பணத்தில் தீர்க்க முடியும் என தெரிவித்திருந்தது.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனை ஒன்றை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri