பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க ஏன் அஞ்சுகின்றீர்கள் ? - அரசிடம் மாணவர் ஒன்றியம் கேள்வி
ஆரம்பப் பிரிவு மாணவர்களுடைய கற்றல், கற்பித்தல் நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்றால் ஏன் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முடியாது? ஏன் அரசு அச்சமடைகின்றது? என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தல்லைவர் ஸ்ரீதன்ன தேரர் (Sreedhanna Thera) கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வித்துறையின் கட்டமைப்பு ஸ்தம்பிதம் அடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளன.
ஒருபுறம் பல்கலைக்கழக கட்டமைப்பும் மறுபுறம் பாடசாலைக் கட்டமைப்பும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
ஆனால், இந்தக் காலப்பகுதிக்குள் பாடசாலையையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ ஆரம்பித்தல் தொடர்பான எந்தச் செயற்றிட்டங்களும் அரசிடம் இருக்கவில்லை.
தற்போதைய நிலைப்பாட்டினுள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் தொடர்பான ஆலோசனைகளை நாமும் அரசிடம் முன்வைத்திருந்தோம்.
ஆனால், அது தொடர்பில் அரசு எந்தக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை.
மாறாக அவர்கள் நிகழ்நிலை கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைளை மாத்திரமே முன்னெடுப்பதற்கான யோசனையை முன்வைத்தனர் என தெரிவித்துள்ளார்.





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
