மோடியின் இலங்கை விஜயத்தில் ஈழத்தமிழர் முக்கியத்துவம் இழக்க காரணம்
இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தில் ஈழத்தமிழர்கள் புறக்கணிப்பட்டதற்கு நடைபெற்று முடிந்த தேர்தல்களில் தமிழர்கள் அளித்த வாக்குகளும் ஒரு காரணம் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழர் தரப்பு ஒரு தனித்தரப்பாக இருந்தது.
ஆனால் முள்ளிவாய்க்கால் நிகழ்விற்கு பின்னர் தமிழ் தலைமைகளும் அந்த நிலைபாட்டில் இல்லை.
கடந்த தேர்தல்களில் இடம்பெற்ற வாக்களிப்புடன் சில தமிழ் மக்களுக்கும் அந்த நிலைப்பாடு இல்லாததை போல் உள்ளது.
அதனுடைய வெளிப்பாடு கூட இலங்கை விஜயத்தில் ஈழத்தமிழர் முக்கியத்துவம் இழக்க காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...