உயர் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஏன் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவதில்லை: ஞானசார தேரர் கேள்வி
இலங்கை ஜனாதிபதி மற்றும் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பரிந்துரைக் குழுவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Gnanasara Thera) கேள்வி எழுப்பியுள்ளார்.
கோறளைப்பற்று வாழைச்சேனையில் இன்று பிரதேச செயலகத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்வின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 30 வருட காலமாக ஏழை மக்கள் தங்களது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
எனவே பல்வேறுபட்ட பிரச்சினைகளை திர்க்கவேண்டிய நிலை இருக்கிறது.
யுத்த காலங்களில் வெளியேறியவர்கள் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாடு பார்க்காமல் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலனிக் குழுவில் வழங்கப்படும் பரிந்துரைக்கு இன்று வாழைச்சேனைக்கு வந்தவுடன் திர்வு கிடைத்துள்ளது.
வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது திம்புலாகல தேவாலங்கார தேரோ மற்றும் பிரதேச புத்திஜீவிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தங்களது தாங்கள் பிரதேசத்தில் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை முன்வைத்தனர்.
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan