கனடாவில் சோகத்தை ஏற்படுத்திய யாழ். தமிழ் குடும்பத்தினரின் மரணம்! தாயார் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கனடா - மார்க்கம் நகரில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது, குறித்த தாயாரின் இரு பிள்ளைகள் உயிரிழந்தனர்.
கனடாவில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இணுவில் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களான ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு சகோதரர்கள் உயிரிழந்த நிலையில் சம்பவத்தில் காயமடைந்த அவர்கள் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கவனயீனம் காரணமாக ஏற்பட்ட விபத்து
பாரிய வாகனம் ஒன்றை செலுத்தி வந்த சாரதி ஒருவரின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதுடன், தாயாரின் கண் முன்பாகவே அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
அந்த விபத்தில் பாரிய ட்ரக் வண்டி ஒன்றும் தமிழ் குடும்பம் ஒன்று பயணித்த கார் ஒன்றும் மோதி நடந்த விபத்தில் பதீரனா புவேந்திரன் (21) மற்றும் அவரின் சகோதரி நெலுக்சனா புவேந்திரன் (23) இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர்களின் தாய் ஸ்ரீரதி சண்முகநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடச்சியாக சிகிச்சை வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றார்.
இது தொடர்பில் உயிரிழந்த பதீரனாவின் உறவினர்கள் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், பதீரனா மற்றும் நெலுக்சனாவின் மரணத்தை என்னால் நம்பமுடியவில்லை.
சிகிச்சையில் உள்ள ஸ்ரீரதி தேறி வருகிறார், உடல்நிலை மேம்பட்டு வருகின்றது என மருத்துவமனை தெரிவித்ததாக கூறியுள்ளார்.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
