உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொருளாதார உச்சி மாநாடு: கெஹலிய ரம்புக்வெல்ல விஜயம்
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரசியல்வாதிகள் குழுவொன்று பிலிப்பைன்ஸ்க்கு சென்றடைந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொருளாதார உச்சி மாநாடு நாளை (22) ஆரம்பமாகவுள்ள நிலையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பொருளாதார உச்சி மாநாடு
மேற்குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பை அரசியல்வாதிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ளதுள்ளதுடன் இவ் பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் உலக சுகாதார நிறுவனமே ஏற்கவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கயாஷான் நவானந்தன், மதுர விதானகே, காவிந்த ஜயவர்தன ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.எச்.ஆர். சமரதுங்க, சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, கலாநிதி துஷ்னி வீரகோன் மற்றும் ஏ.எஸ். பொல்கஸ்தெனிய பிரதேச உள்ளிட்டோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
