யாழில் வயல்வெளிக்கு தீ மூட்டிய விசமிகள்
யாழ்ப்பாணம் மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருடாவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும்
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் சென்று தீப்பரவலை கட்டுப்படுத்தும் துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீசும் கடும் காற்றுக் காரணமாக பெரும் சுடர்விடு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் பலமணி நேரம் போராடியே கட்டுப்படுத்தினர்.
இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான பல கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடாவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர் கதையாகி வருகின்றது.
இந்நிலையில் குறித்த சட்டவிரோத செயலைச் செய்யும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது பிரதேசத்தின் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில்
மேலும், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள குறித்த பகுதிக்கு பருவ காலங்களில் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வருகை தருவதும் வழமை.
இவ்வாறு தீ வைக்கப்படுவதால் பறவைகள் சரணாலயமும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தொடர்ச்சியாக புற்றரைகள் தீவைக்கப்படுவதால் அந்த புற்களை உணவாக கொள்ளும் கால்நடைகளும் உணவின்றி குடிமனைகளுக்கு செல்லும் நிலையும் அதனால் கட்டாக்காலி தொல்லை என பிரச்சினைகள் உருவாகி மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
