அர்ஜுன் அலோசியஸிடமிருந்து நிதி பெற்றவர்கள் குறித்து வெளியாகவுள்ள தகவல்
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி கொடுக்கல் வாங்கலில் அர்ஜுன் அலோசியஸிடமிருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும் என வர்த்தக, வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான முதல்நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிணைமுறி மோசடி விவகாரம்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அறிக்கையில் அடிக்குறிப்பு எழுதியவர்கள் பற்றி ஓரிரு விடயங்களைக் கூறினார்.

பிணைமுறி மோசடி விவகாரம் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டது. அலோசியஸ் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைச்சாத்திட்ட 156 காசோலைகளில் தனியார் வங்கி ஒன்றின் ஊடாக நிதி பரிமாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரசியல்வாதிகள் கொடுக்கல் வாங்கல்
அலோசியஸிடமிருந்து நேரடியாக நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நபருக்கு சொந்தமான நிறுவனத்திலிருந்து மதுபான நிலையங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் குறித்த மதுபான நிலையத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளார்கள். ஆகவே, மதுபான நிலையத்தின் உரிமையாளர்கள் எதிர்வரும் காலங்களில் சாட்சி சொல்லவேண்டி வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்க நிதி தொடர்பான குழுவில் இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பேச நேரிடும். ஒருசிலர் வரலாற்றை மறந்து விட்டு செயற்பட முயற்சிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம் News Lankasri
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam