போலி அமெரிக்க டொலர்களை அச்சிட்ட பிரதான சந்தேக நபர் கைது
கந்தளாய் மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களில் கைப்பற்றப்பட்ட போலி அமெரிக்க டொலர்களுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபரை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பத்தரமுல்லையை சேர்ந்த 36 வயதான இந்த நபர் நேற்று மாலை அநுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
100 அமெரிக்க டொலர் பெறுமதியான 327 போலி டொலர் நாணயத்தாள்கள் அண்மையில் கைப்பற்றப்பட்டன.
டொலரை அச்சிடப் பயன்படுத்தப்படும் விசேட காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களை இந்த சந்தேக நபரே இறக்குமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காகிதங்கள் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் குற்றவியல் விசாரணை திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri