தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசிகளை பெற வேண்டும்- சன்ன ஜெயசுமண
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என்று அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்குத் தடுப்பூசி வழங்க முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. இந்தநிலையில் தடுப்பூசி மையங்களைத் தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் அரசாங்கம் காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமண கூறியுள்ளார்.
30 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலானோர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர், ஆனால் பல்வேறு காரணங்களால் தடுப்பூசிகளை மறந்த பலர் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி மையங்களைத் தினமும் அவர்களுக்காகத் திறந்து வைக்க முடியாது. எனவே, இந்த வாரத்திற்குள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுவதை முடிக்க விரும்புவதால், இந்த வாரத்திற்குள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு 30 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி இயக்கம் கடந்த வாரம் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் அந்த காலம் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டது என்றும் சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
