புதிய பிரதமரை தீர்மானிக்க தயாராகும் கனடா அரசியல் களம்!
கனடாவின் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகியதனை தொடர்ந்து, அந்த பதவிக்கான அந்த பதவிவை வகிக்கபோகும் அடுத்த நபர் யார் என்ற எதிர்பார்ப்புக்கள் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளன.
மேலும் அவரின் பதவி விலகல் என்பது அந்நாட்டின் லிபரல் கட்சியினுடைய தலைமை பொறுப்புக்கான இடைவெளியையும் உருவாக்கியுள்ளது.
கனடா நாடாளுமன்றம் பல மாதங்களாக செயல்படாமல் முடங்கியுள்ளது. இந்நிலையில் மார்ச் 24ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லிபரல் கட்சி
இந்நிலையில், மார்ச் 24ஆம் திகதிக்கு முன்னர் லிபரல் கட்சியினுடைய தலைமை பதவிக்கு ஒருவரை நியமிக்கும் கடப்பாட்டை அக்கட்சி கொண்டுள்ளது.
கனடாவில் அன்மைக்காலமாக ஜஸ்டின் ட்ரூடோவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
மேலும் சொந்த கட்சியிலேயே அந்த எதிர்ப்பின் ஆரம்பம் மேலெழுந்தது.
இந்த நிலையில் கனடாவின் புதிய பிரதமராக யார் தேர்வு செய்யப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளது.
அனிதா ஆனந்த்
இதன்படி அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்தின் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது.
இவரது தந்தை ஆனந்த் தமிழ்நாட்டையும், தாய் சரோஜ் பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் இருவரும் வைத்தியர்கள். அனிதா ஆனந்த் 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
ஜோர்ஜ் சாகல்
அதேபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான ஜோர்ஜ் சாகல், பிரதமர் பதவி போட்டியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இவர் இயற்கை வளங்களுக்கான நிலைக்குழுவின் தலைவராகவும், சீக்கிய காக்கசின் தலைவராகவும் காணப்படுகிறார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு துணைப் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கிறிஸ்டியா பிரீலேண்ட், முன்னாள் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, மூத்த அமைச்சர் டொமினிக் லெப்லாங்க், முன்னாள் பேங்க் ஆப் கனடா மற்றும் பேங்க் ஆப் இங்கிலாந்து ஆகியவற்றின் தலைவர் மார்க் கார்னி மற்றும் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின், கிறிஸ்டி கிளார்க் ஆகியோரும் களத்தில் இறங்கியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |