நான்கு நாடுகளுக்கு அமெரிக்க படைகளை களமிறக்கும் நகர்வில் ட்ரம்ப்!
அமெரிக்காவுடன் 4 முக்கியமான நாடுகளை இணைக்க திட்டமிட்டுள்ள அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அதற்கான படைகளை களமிறக்கவும் தயார் என கூறியுள்ளார்.
இந்த கருத்தானது கனடா உள்ளிட்ட அமெரிக்க அண்டை நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
மேலும், டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் எனவும் முனைப்பு காட்டி வருகின்றார்.
இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களாக பகிரங்க மேடைபேச்சுக்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியும் வருகின்றார்.
பனாமா கால்வாய்
எனினும் ஏனைய தரப்பு இராணுவ ரீதியான தாக்கம் வெளிப்படுத்தப்பட்டாலும், கனடாவுக்கு பொருளாதார அழுத்தம் மூலம் அவர் பிரச்சினையை ஏற்படுத்தகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து பகுதிகள்பாதுகாப்பு ரீதியாக அமெரிக்காவிற்கும் மிகவும் முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகளை தொடர்ந்து அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடாவும் இணைய வேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |