சீனாவில் பரவும் HMPV வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு - சுகாதார பிரிவின் அறிவிப்பு
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என, இலங்கை சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல எனவும் இது20 ஆண்டுகளாக இருந்து வரும் வைரஸ் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் கடந்த ஆண்டு ஜனவரி மாதங்களில் இலங்கையிலும் HMPV தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
HMPV வைரஸ்
பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதுடன், HMPV வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் இவ்வருடம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்

மேலும், கடந்த வருடம் கண்டியில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டதாக சுகாதார திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
“ஊடகங்களில் தேவையற்ற அச்சமும் பீதியும் எழுந்துள்ளது. சீனா மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஒரு புதிய வைரஸ் வந்துள்ளது. கோவிட் 19 தொற்றுநோய் நிலைமைக்கு மீண்டும் செல்ல நேரிடும் என செய்திகள் பரவி வருகின்றது.
எனினும் இந்த வைரஸ் 20 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளது, இது எங்கள் சோதனைகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது உண்மையில் இந்த வைரஸ் சுவாச அமைப்பு தொடர்பான வைரஸ்கள் பெரும்பாலும் குளிர்காலத்தில் வரும். இந்த வைரஸ் அவ்வப்போது வெளிப்படுகிறது.
கண்டி வைத்தியசாலை
பொதுவாக டிசம்பர், ஜனவரி மாதங்களில், உலகில் எல்லா இடங்களிலும் தோன்றும். கண்டி வைத்தியசாலையில் அதன் தொற்றாளர்கள் இருப்பதாக கண்டுபிடித்தோம். இவையெல்லாம் புதிதல்ல என்பதால் யாரும் தெரிவிக்கவில்லை.

முக்கியமில்லாத விடயங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இது மிகவும் சாதாரணமானது.
சாதாரண விடயங்களை வெளியிடுவது தேவையற்றது. அதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம் சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் காரணமாக பெருமளவு நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த வைரஸ் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை அதிகம் பாதிக்கின்றதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri