கோட்டாபயவை பதவியில் இருந்து அகற்றுமா இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை...!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு நாள் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வைத்தியர் ஒருவர் பதிவிட்ட உணர்வுபூர்வமான விடயம் தொடர்பில் மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை
“ஒரு தகப்பனாக அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடியும். கோட்டாபாய ராஜபக்ச இதைப் படித்து, ஏதேனும் குற்ற உணர்வு இருந்தால், இந்த நிர்வாகத்தில் அங்கம் வகித்த அனைவருக்கும் நேரடியாகப் பொறுப்பேற்று, உடனடியாக பதவி விலக வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.
நுவரெலியாவில் உரிய நேரத்தில் ஆட்டோ கிடைக்காமையினால் வைத்தியசாலை செல்ல முடியாத நிலையில், பிறந்தே இரண்டு நாளான குழந்தை ஒன்று நேற்றையதினம் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam