தோல்வியிலும் வெற்றி கண்ட இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் - குவியும் பாராட்டு
இலங்கை கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று வடிவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற போதும், இறுதி போட்டியில் இலங்கை அணியின் அபார ஆட்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதி என பலரும் எண்ணியிருந்தனர். ஆனாலும் இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்கவின் அதிரடியான ஆட்டதால் இலங்கை அணி வெற்றியை பதிவு செய்திருந்தது.
அணித்தலைவரின் அதிரடி ஆட்டம்
இறுதி மூன்று ஓவர்களில் 59 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடி ஆட்டதால் தசுன் சானக்க வெற்றியை பெற்றுக்கொடுத்தார். எதிர்பாராத வகையில் இலங்கை அணி பெற்ற வெற்றி மைதானத்தில் பார்வையாளராக இருந்த சிறுவனின் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
இளம்ரசிகன் அணியின் வெற்றியை மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கொண்டாடிக்கொண்டிருந்தார். இலங்கை அணி மீதான சிறுவனின் அன்பு அதில் வெளிப்படுத்தப்பட்டதனை அவதானிக்க முடிந்ததாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்தது.
பிரபல்யம் அடைந்த சிறுவனின் செயற்பாடு
இது தொடர்பான காணொளியை இலங்கை கிரிக்கெட் சபை தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கங்கள் அனைத்திலும் பதிவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த காணொளியில் இருந்த குறித்த சிறுவனை கண்டுபிடித்து நேற்று அவரை சந்திப்பதற்கு தசுன் சானக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
குறித்த சிறுவனை ஹோட்டல் ஒன்றில் சந்தித்த தசுன் சானக்க அவருடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இலங்கை கிரிக்கெட் சபையின் சமூக வலைத்தளங்களிலும் தசுன் சானக்கவின் பேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்டிருந்தது.
இலங்கை அணி இந்த தொடரில் தோல்வியடைந்த போதிலும் இறுதி ஆட்டத்தின் வெற்றி மற்றும் தசுன் சானக்கவின் இந்த செயற்பாடு இலங்கை மக்களை நெகிழ வைத்துள்ளது.
மிகவும் மனிதாபிமானமிக்கவரர் என சமூக வலைத்தள ரசிகர்கள் தசுன் சானக்கவை பாராட்டியுள்ளனர்.