யார் இந்த சண்முகம் குகதாசன்..!

Parliament of Sri Lanka R. Sampanthan ITAK
By DiasA Jul 10, 2024 04:30 PM GMT
Report

திருகோணமலை நகரில் இருந்து கடலோரமண்டி வடக்கு நோக்கி நகரும் போது குச்சவெளிக்கும் புல்மோட்டைக்கும் இடையில் இருக்கும் திரியாய் என்ற அழகான சிற்றூரில் சண்முகம் தனபாக்கியம் தம்பதிகளுக்கு 1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி குகதாசன் பிறந்தார் .

இவர் திரியாய் மண்ணின் பொருளாதார அபிவிருத்தித் திட்டமிடலில் இளநிலைப் பட்டமும் (B.A.), அரச அறிவியலில் முதுநிலைப் பட்டமும் (M.A.), பயின்று பெற்ற முதல் பட்டதாரி ஆவார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் பகல் கொள்ளை ! சிக்கியது மற்றொரு பெரும் ஆதாரம்

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் பகல் கொள்ளை ! சிக்கியது மற்றொரு பெரும் ஆதாரம்

வடக்கு கிழக்குத் தமிழர்களின் உரிமைகளை பெற்று எடுப்பதற்காக நடைபெற்ற போராட்ட வரலாற்றில், 1970 களின் இறுதிக் காலங்களில் டேவிட் ஐயா, மற்றும் டாக்டர் ராஜசுந்தரம் இணைந்து தொடங்கிய காந்தீயம் திருகோணமலைக்கு வந்த போது அதன் முதல் தலைவராக இருந்த “சிவஞானச் செல்வர்” செல்லப்பா சிவபாதசுந்தரம் ஐயாவின் பின்னர் 1977 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை அரசாங்கத்தினால் காந்தீயம் தடை செய்யப்படும் வரை அந்த காந்தீயத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவராக கடமையாற்றினார்.  

இலங்கை அரசாங்கம்

சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்டத்தின் காந்தீய தலைவராக கடமையாற்றிய காலத்தில் இலங்கை முழுவதும் 1977ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் இன்னலுற்ற மலையகத் தமிழ் மக்களை கொண்டுவந்து குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்லம்பத்தை, மொறவெவப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பன்குளப்பகுதி மற்றும் எல்லைக் காளிகோவில் பகுதி, அத்தோடு மூதூர்ப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியடிச் சோலைப் பகுதி, முதலிய இடங்களில் குடியமர்த்தினார்.

மேலும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் முன்னின்று உழைத்தார். ஐம்பதிற்கும் மேற்பட்ட காந்தீயப் பாலர் பாடசாலைகளையும் காந்தீயத்தின் மூலம் நடத்தி வந்தார்.   

யார் இந்த சண்முகம் குகதாசன்..! | Who Is Shanmugam Kugadasan

குகதாசன் தலைமை வகித்த காந்தீய அமைப்பில் தொண்டர்களாக இயங்கிய பலர் காந்தீய தடையின் பின்னாளில் ஆயுதப் போராளிகளாகி தீவிரவாத அரசியலை கையில் எடுத்த போதும், இவர் மிதவாத அரசியலுடனேயே தன்னை மட்டுப் படுத்திக் கொண்டாரே என்றாலும், இவரது மிதவாத அரசியலைப் பின்பற்றி வளர்ந்து வந்த திரியாய் இளைஞர்களில் பலர் தீவிர ஆயுதப் போரட்டங்களிலும் தங்களின் பங்களிப்புகளைச் செய்தார்கள்.

அந்த வகையில் இந்த குகதாசன் பிறந்த திரியாய் மண்ணே 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி திருகோணமலை மண்ணில் களமாடி மடிந்த சுப்பிரமணியம் நற்குணம் என்ற முதலாவது மாவீரரைக் கொடுத்து இருந்தது.   

அவுஸ்திரேலியாவில் வாழை இலை விருந்து வைத்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்திய இலங்கை யுவதி

அவுஸ்திரேலியாவில் வாழை இலை விருந்து வைத்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்திய இலங்கை யுவதி

இலங்கை அரசாங்கத்தினால் காந்தீயம் தடைசெய்யப்பட்டு,அதன் தலைவராகிய டேவிட் ஐயா, மற்றும் செயலாளராகிய டாக்டர் ராஜசுந்தரம் கைது செய்யப்பட, திருகோணமலை மாவட்ட காந்தீய தலைவரான சண்முகம் குகதாசனும் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்குப் பின்னர் ஆதாரத்துடன் எதையும் நிரூபிக்க முடியாத காரணத்தால் விடுதலையாக்கப்பட்டார்.

விடுதலையானாலும் தொடர் கண்காணிப்பில் இலங்கை பொலிஸாரின் அச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்த சண்முகம் குகதாசன் 1983 ஆம் ஆண்டு ஜூலைமாதம் 23 ஆம் திகதி விடுதலை புலிகளால் இலங்கை இராணுவத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட இனக்கலவரத்தினால், இலங்கைப் படைகளின் கண்காணிப்பில் இருந்த குகதாசனுக்கு ஏற்கனவே இருந்த உயிர் அச்சுறுத்தல்களின் காரணமாகவும் வேறு வழியின்றி அவர் தமிழ்நாட்டுக்கு சென்றார்.    

ஈழ எதிலியர் மறுவாழ்வுக் கழகம் 

அங்கே தமிழரசுக் கட்சியின் நிறுவுனரான செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசனுடன் இணைந்து, ஈழ எதிலியர் மறுவாழ்வுக் கழகம் (OFERR) என்ற அமைப்பைத் தமிழ் நாட்டில் பதிவு செய்தார்.

அந்த அமைப்பின் மூலம் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களால் உடமைகளை இழந்து, உறவுகளை இழந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்து, முகாம்களில் தங்கியிருந்த இலட்சக்கணக்கான இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு நிவாரணம் மறுவாழ்வு மற்றும் கல்வி வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

யார் இந்த சண்முகம் குகதாசன்..! | Who Is Shanmugam Kugadasan

அந்த வகையில் அன்றைய கால கட்டத்தில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த எம் ஜி இராமச்சந்திரனை, அந்த OFERR அமைப்பின் பிரதிநிதியாகப் பல முறை நேரில் சந்தித்து அந்த MGR என்ற மக்கள் திலகத்தின் மூலம், தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழ் அகதி மாணவர்கள் தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் மருத்துவம், பொறியியல், அறிவியல், தொழில் நுட்பம், வணிகம் மற்றும் கலைத் துறைகளில் பட்டப் படிப்புகளுக் குஅனுமதி பெறவும் மிகக் குறைந்த கட்டணத்தில் தம் கல்வியைத் தொடரவும் தமிழ் நாட்டு முதலமைச்சர் MGR மூலம் ஆவன செய்து அரும்பணி ஆற்றினார்.   

இவ்வாறு ஆறு ஆண்டு தொடர்ச்சியான குகதாசனின் சிறப்பான பணியாற்றலினால் இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற இலங்கைத் தமிழ் மாணவர்களில் 180 மாணவர்கள் மருத்துவ படிப்பையும் 480 மாணவர் பொறியியல் படிப்பையும் 2000 மாணவர் பட்டப்படிப்பையும் பெற்றுக் கொண்டார்கள்

மாணவர்கள் கல்வியைத் தொடர இவரது OFERR நிறுவனத்தின் மூலம் பண உதவியும் பெற்றுக் கொடுத்தார்.

வவுனியாவில் திறந்து வைக்கப்பட்ட இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம்

வவுனியாவில் திறந்து வைக்கப்பட்ட இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம்

இவரது இந்த உதவியினால் இந்தியாவின் தமிழ் நாட்டில் பட்டப்படிப்பை முடித்த பல ஆயிரம் ஈழத் தமிழ் இளைஞர்கள் சட்டத்துறை, வைத்தியத்துறை அத்தோடு பொறியியல் துறை என்று இன்னும் பல தொழில்முறைத் துறைகளில் தமக்கென தனித்துவ வழிசமைத்து, உலகெல்லாம் பரந்து வாழ்கின்றார்கள்

அவர்களில் சிலரது நிதி உதவி சண்முகம் குகதாசனது நல்ல திட்டங்களுக்கு இன்றுவரை சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதே யதார்த்தம் ஆகும்.  

இந்திய உளவுத்துறை

குகதாசன் தமிழ் நாட்டில் தங்கி இருந்த அதே காலத்தில் தனது OFERR நிறுவனத்தில் பணியாற்றிய தஞ்சாவூரைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணை காதலித்து மணந்து இரு பிள்ளைகளுக்கு தந்தையாகினார்.

இருந்தாலும், தமிழ் தேசியத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் மாறாத பற்று கொண்டதனால் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தின் தேவையை வலியுறுத்தி அதனை அனைத்து இந்திய மக்களுக்கும் அறியப்படுத்த வேண்டும் என்பதற்காக சென்னையில் காந்தளகம் புத்தகநிலையம் வைத்திருந்த மறவன் புலவு சச்சிதானந்தத்துடன் பணியாற்றி அதன் மூலம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றையும் நடத்தினார். 

யார் இந்த சண்முகம் குகதாசன்..! | Who Is Shanmugam Kugadasan

இதன் காரணமாக அன்றைய இந்தியாவின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டார்.

இவரது அந்த ஆங்கிலப் பத்திரிகையும் இந்திய அதிகார வர்க்கத்தினால் தடை செய்யப்பட்டதுடன், 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி நடைபெற்ற துன்பியல் சம்பவத்தின் பின்னரான காலத்தில் தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழருக்கு எதிரான கெடுபிடிகள் அதிகரித்த வேளையில் குகதாசனை இந்தியா வெளியேறக் கூறியதை தொடர்ந்து கனடாவுக்கு வந்த குகதாசன் கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத்தில் இணைந்து, அந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து இருபது ஆண்டுகள் பணியாற்றினார்.  

இந்தக் காலப் பகுதியில் போராலும் இயற்கைப் பேரிடர்களாலும் இன்னலுற்ற திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, கல்வி, வாழ்வாதாரம், முதலியன கிடைக்க அயராது உழைத்தார்.

போலி மலேசிய கடவுச்சீட்டு பயன்படுத்திய இலங்கையர் கைது

போலி மலேசிய கடவுச்சீட்டு பயன்படுத்திய இலங்கையர் கைது

தனது திருகோணமலை மண்ணின் மீது மட்டும் பற்றுறுதியினை மட்டுப்படுத்திக் கொள்ளாமல், தமிழ் தேசியத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் மாறாத பற்றுகொண்டதனால், கனடாவில் வாழும் இலங்கைத் தமிழரது பிள்ளைகள், தமிழர் என்ற அடையாளத்தைத் தொலைக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை இலக்காக்கி, அரச மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் வழியாகத் தமிழ் கல்வியை ஊக்குவித்தார்.

கனேடியக் கல்வி முறை

கனடாவில் தமிழ்க் கற்பிப்பதற்குப் பாடநூல் இன்மை பெரும் சிக்கலாக இருந்ததை உணர்ந்த குகதாசன், இந்த சிக்கலை தீர்க்கும் பொருட்டாக கனேடியக் கல்வி முறைக்கு அமையப் பாட நூல்களையும் பயிற்சி நூல்களையும் எழுதிக் கொடுத்து, கனடாவில் உள்ள தமிழ் பயிற்றுவிக்கும் நிறுவனங்களில் ஆசிரியர் அறிவுரையாளர், விரிவுரையாளர், மற்றும் துறைத் தலைவர் ஆகிய பதவிகளில் பணிபுரிந்து கனேடிய மண்ணில் தமிழ்க் கல்வியை தொடர்ந்தும் ஊக்குவித்தார்.

யார் இந்த சண்முகம் குகதாசன்..! | Who Is Shanmugam Kugadasan

இதனைவிட குகதாசன் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலிப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து, தமிழ் மொழி BA மற்றும் MA பட்டப் படிப்புகளைக் கனடாவில் நடத்தினார்.

இதன்மூலமாக கனடாவில் தமிழ்மொழிப் பட்டதாரிகளும் தமிழ் ஆசிரியர்களும் கனேடிய மண்ணில் உருவாகுவதற்கு முதன்மைக் காரணமானார்.

இதற்கெல்லாம் மேலாய் கனேடியக் குடிவரவுத் துறையின் குடியமர்வு மற்றும் இசைவாக்கத் திட்டத்தில் வேலை வாய்ப்புப் பிரிவு இணைப்பாளராகப் பதினெட்டு ஆண்டுகள் பணிபுரிந்த குகதாசன், இந்தக் காலத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட உலகின் பல பாகங்களில் இருந்து கனடாவுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான புதிய குடிவரவாளருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு. குடியமர்வு உள்ளிட்ட புதுவாழ்வு கிடைக்கத் துணை புரிந்தார்.

மேலும் அவர் கனடாவில் வாழ்ந்த காலத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் கல்விப் பணிகளுக்குப் பேருதவி புரிந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு காலத்தின் பின்னரான 2013 ஆம் ஆண்டு காலப்ப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை வெளி நாட்டு தூதுவர்கள் வந்து சந்தித்து செல்ல ஏதுவாக கொழும்பில் தமிழரசு கட்சி அலுவலத்தை வாடகை வீடொன்றினை எடுத்து பூர்த்தி செய்தார்.

இந்த காலத்தின் பின்னர் கனடா நாட்டுக்கு வருகை தந்த இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் அவர்களது வேண்டுகோளினால் குறிப்பாக, தனக்கு பின்னர் திருகோணமலைக்கு நல்ல தலைமைத்துவம் தேவை என்ற ஐயா சம்பந்தனது வற்புறுத்தலினால் குகதாசன் அவர்கள் தனது கனேடிய உரிமைகளை துறந்து, 2018 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் நிரந்தரமாக இலங்கை திரும்பினார்.

பின்தங்கிய பாடசாலைகள்

இவ்வாறு இலங்கை திரும்பிய குகதாசன் திருகோணமலை மண்ணில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி ஈட்டவில்லை என்றாலும் இலங்கையின் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் நல்லிணக்க அரசாங்க காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டில் இயங்கிய கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி இணைப்பாளராகவும் பணிபுரிந்தார்.

யார் இந்த சண்முகம் குகதாசன்..! | Who Is Shanmugam Kugadasan

இக்காலத்தில் குகதாசன், சம்பந்தனின் ஆதரவோடு, 2019 ஆம் ஆண்டில் மட்டும் 2217 மில்லியன் ரூபா செலவில் வீடமைப்பு, குளங்கள் திருத்துதல், வீதியமைப்பு, பாடசாலைக் கட்டடங்களை நிறுவுதல் கோவில் திருத்தங்கள், நீர் வழங்கல், மருத்துவமனை மறுசீரமைப்பு, கடற்தொழில் கட்டடங்கள் அமைத்தல், பெண்களுக்கான கைத்தொழில் முயற்சிகளை உருவாக்குதல், இளையோர் தொழில் பயிற்சி, சமூக சேவைக் கட்டடங்கள் அமைத்தல் போன்ற முக்கிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள அயராது உழைத்தார்.

இதனை விட கட்டுக்குளம், குமாரபுரம், ஆகிய இடங்களில் நெசவு சாலைகளை திறக்க வழிவகை செய்தார் என்பதோடு, நூறு தமிழ் இளையோருக்கு பார ஊர்திகள் இயக்குநர் வேலைவாய்ப்பை பெறக்கூடிய பயிற்சிகளை அளித்துள்ளார் என்பது எதிர்கால எம் மண்ணின் வளர்ச்சிக்கு அவர் எடுத்திருக்கும் சிரத்தையை காட்டுகின்றது.

யார் இந்த சண்முகம் குகதாசன்..! | Who Is Shanmugam Kugadasan

குகதாசன் 2018 தொடக்கம் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து கனேடிய திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் உதவியோடு  பல்கலைக்கழக அனுமதி பெற்றும் பெற்றோர் இன்மையால் அல்லது பண வசதி இன்மையால் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ள திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 64 பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கல்வியை தொடர மாதந்தோறும் பண உதவி கிடைக்க ஆவன செய்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மிகப் பின்தங்கிய ஊர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைத் திருகோணமலை, உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி விடுதிக்குக் கொண்டுவந்து அங்கு, அவர்களின் உணவு, உடை, உறைவிடம், கல்வி, உடற்பயிற்சி மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்து கொடுத்துள்ளார்.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பலர் காயம்

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பலர் காயம்

அவர்களுக்கு அறிவியல், தொழினுட்பம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களிலும் சிறப்புக் கவனம் செலுத்தி கல்வியைப்புகட்டி இந்த மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்து, அவர்களைத் துறைசார் வல்லுநர்களாக உருவாக்கி, அவரவர்களது ஊர்களுக்கு திருப்பி அனுப்பி, அவ்வூர்களை மேம்படுத்தும் கனவோடு இந்த சிறப்புக் கல்வித் திட்டதைச் செயற்படுத்தி வருகின்றார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல், சேருவில, மொறவெவ மற்றும் குச்சவெளிக் கோட்டங்களிலுள்ள பின்தங்கிய தமிழ் ஊர்களில் உள்ள பல பாடசாலைகளில் கணினி, கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லாத சூழல் நிலவுகின்றது என்பதன் காரணமாக அந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகக் கல்வித் துறையின் வேண்டுகோளுக்கு அமைய மேற்படி பாடசாலைகளுக் தொண்டர் ஆசிரியர்களை நியமித்து அந்த ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கி வரும் திட்டத்தையும் செயற்படுத்தி வருகின்றார்.

நிவாரண உதவிகள் 

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐம்பது பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி பயிலும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவரது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு அண்ணளவாக ஆயிரம் மாணவர்களுக்கு ஞானோதயம் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி என்ற நூலை, 2021 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஆண்டுதோறும் வழங்கி வரும் திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றார்.

இதன்மூலம் புலமைப்பரிசில் பெறுபேறுகள் மேம்பட்டு செல்வதை கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது.

யார் இந்த சண்முகம் குகதாசன்..! | Who Is Shanmugam Kugadasan

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானம் தரும் தொழில் முயற்சிகளாக கைத்தொழில், கமத் தொழில் ,கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளை உருவாக்கிக் கொடுத்து வருகின்றார்.இந்தத் திட்டத்தின் மூலமாக சில நூறு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமங்களில் வாழும் மக்களது குடிநீர் சிக்கலைத் தீர்க்கும் நோக்கத்தோடும், வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டாகவும் தோட்டக் கிணறுகளையும் குழாய்க் கிணறுகளையும் சிட்னி முருகன் கோவில் மற்றும் அவுஸ்ரேலியத் தமிழ்ப் பொறியியாளர் சங்கத்தின் நிதி உதவியோடு குகதாசன் அமைத்துக் கொடுத்து இருக்கின்றார்.

இதன் காரணமாக குடிநீர் சிக்கலுக்குத் தீர்வு காண்பதோடு இந்த நீரைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டம் செய்து வருவாயைப் பெருக்கவும் வழி ஏற்படுகிறது.

கோவிட் காலத்தில் திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களுக்கு ஏறத்தாழ இருபது மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணம் பெற்றுக் கொடுத்த குகதாசன் அந்த காலத்தில் மட்டுமன்றி அதன் பிறகும் அதற்கு முன்னரான காலங்களிலும் வெள்ளம் ,வறட்சி, புயல் முதலிய இயற்கைப் பேரிடர்களால் பதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மக்களுக்கு இன்னும் பல மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரண உதவிகள் கிடைக்க ஆவன செய்து வருகின்றார்.

2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் குகதாசன், 1975 ஆம் ஆண்டு முதல் தமிழரசு கட்சியின் உறுப்பினராக இருந்து வருகின்றார்.

அத்தோடு 1976 முதல் 1984 வரை தமிழரசுக் கட்சியின் திரியாய் மூலக்கிளைத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்!

இலங்கை தமிழரசு கட்சி

இதனை விட 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டின் இறுதி வரை தமிழரசு கட்சியின் கனடாக் கிளைச் செயலாளர் தலைவர் ஆகிய பொறுப்புகளிலும் பணியாற்றி, இந்தக் காலப் பகுதியில் தமிழரசு கட்சியின் செயற்பாடுகளுக்கு அதிக நிதியுதவி கிடைக்கவும் முன்னின்று உழைத்தார்.

2018 ஆம் ஆண்டு 360 உறுப்பினரோடு இருந்த தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை உறுப்பினர்களின் தொகையை 5000 ஆக உயர்த்தி 60 வட்டார கிளைகள் 6 கோட்டக் கிளைகள் ஒரு மாவட்ட கிளை என்ற அடிப்படையில் பிரமிட் வடிவில் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியை கட்டமைத்துள்ளார்.

யார் இந்த சண்முகம் குகதாசன்..! | Who Is Shanmugam Kugadasan

தமிழரசு கட்சிக்குத் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மாவட்ட பணிமனை இல்லை என்ற குறையை போக்கி, பணிமனை ஒன்றை திருகோணமலை நகரில் திறந்து 2018 தை மாதம் முதல் நடத்தி வருகின்றார்.

வயோதிபம் காரணமாக திருகோணமலை மண்ணின் தமிழ் மக்களின் பிரதிநிதி சம்பந்தன் திருகோணமலைக்கு வராத சூழலில், குகதாசன் புத்த பிக்குகள், வனத்துறை, வன விலங்குத் துறை, தொல்பொருள் துறை, எல்லை நிர்ணயக் குழு, துறைமுக அதிகாரசபை, ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலப்பறிப்புக்கு எதிராக இலைமறைகாயாக இருந்து தன்னால் முடிந்ததைச் செய்து வருகின்றார் என்பதே யதார்த்தமாகும்.

இவ்வாறு மக்கள் பணி செய்து மண்ணில் வாழும் ஒருவர் அந்த மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை திருகோணமலை மக்களின் மனதில் நிலைக்கப் பதிவாக்கி, இவ்வாறன ஒருவரைப் பற்றி வெறும் ஊகத்தின் அடிப்படையில் அவதூறு கூறும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தெளிய வேண்டிக்கொள்கின்றேன்.

அத்தோடு இவ்வாறு இந்த சிவனடியான் வியக்கத்தக்க வகையில் மக்கள் பணி செய்து வரும் குகதாசனை கனடா திருகோணமலை நலன்புரிச்சங்க நிகழ்வில் சிலமுறை சந்தித்திருந்தாலும் அவரைப்பற்றி அதிகம் அறிந்து இருக்கவில்லை என்பதே நிதர்சனம் ஆகும்.

ஆகவே என்னைப் போன்ற அறியாத பலர் அவரைப் பற்றி அறியாத தகவல்களை சுருக்கமாக பலர் அறியப்பதிவாக்கி, திருகோணமலை மண்ணிற்காக அர்ப்பணிப்போடு செயல்படும் சண்முகம் குதாசன் நிடூடி வாழவேண்டும் என சுவாமி சங்கரானந்தா குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Ilford, United Kingdom, Birmingham, United Kingdom

04 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், சிட்னி, Australia

03 Apr, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, East Ham, United Kingdom

31 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி நுணாவில், நுணாவில்

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US