கோவிட் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? கனடாவில் பணியாற்றும் இலங்கை வைத்தியர் வெளியிட்ட தகவல்
பூர்வக்குடியின மற்றும் வெள்ளையரல்லாத மக்கள் கோவிட் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா - வின்னிபெக்கில் தொற்று நோயியல் நிபுணராக பணியாற்றும் இலங்கையரான வைத்தியர் அமில ஹேந்தெனிய (Dr. Amila Heendeniya) இதனை தெரிவித்துள்ளார்.
எண்ணிக்கை மற்றும் நோயின் தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்று குறித்துக் காணப்படும் மூட நம்பிக்கைகளை நீக்கி, மக்களை தடுப்பூசி பெற ஊக்கப்படுத்துவதற்காக வைத்தியர்களின் உதவியுடன் இணைய பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனிடோபாவில் வாழும் பல்வேறு சமூகங்களை மையமாகக்கொண்டு இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. U Multicultural என்ற அமைப்பினால் இந்த நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வெவ்வேறு சமுதாயப் பின்னணியை கொண்ட வைத்தியர்கள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் இலங்கையை பின்னணியாகக் கொண்ட வைத்தியர் அமில ஹேந்தெனியவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தொற்றுநோய்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் பூர்வக்குடியின மற்றும் வெள்ளையரல்லாத மக்கள் கோவிட் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
“ மக்கள் தான் கூறுவதை ஒருவேளை கவனிக்கலாம் என தான் கருதுவதாகவும், அது அவசியமான ஒன்று என தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், மக்கள் தடுப்பூசித் திட்டத்தின்மீது நம்பிக்கைக் கொண்டு, அதனால் அவர்களிடையே தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம் என்றும் தான் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.