இலங்கையை ஆட்டிப்படைக்கும் பெண் - ஞானாக்காவின் சித்து விளையாட்டால் அவுட்டான சவேந்திர சி்ல்வா
இலங்கையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் நிலையில் மந்திரவாதி பெண்ணான ஞானாக்காவின் செயற்பாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஞானாக்காவின் அடிமைகளாக உள்ள போதும், அவரின் செயற்பாடு அரசியல் மட்டத்தில் பெரும் தாக்கம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா பதவி விலகவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஞானாக்காவின் கடுமையாக உத்தரவு உள்ளதாக தெரிவிக்கப்படுகுிறது.
சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவி
ஓய்வு பெறுவதற்கு 7 மாதங்கள் மீதமாக உள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான சவேந்திர சில்வா நீக்கப்பட்டு, மேஜர் ஜெனரல் விக்கும் லியனக இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சவேந்திர சில்வா முப்படைகளின் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக கடமையாற்றியதோடு உத்தியோகபூர்வமாக இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
எந்த அதிகாரமும் இல்லாத முப்படைகளின் தளபதிகளை ஒருங்கிணைக்கும் ஒரே கடமையாக இருக்கும் இந்த பதவி அலுவலகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பதவியாகும்.
2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி இராணுவத்தில் இருந்து சவேந்திர சில்வா ஓய்வு பெறவிருந்தார். ஆனால் அவருக்கு மூன்று பணி நீடிப்புகள் வழங்கப்பட்டு தற்போது இந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெறவிருந்தார்.
சவேந்திர சில்வா பதவி நீக்கப்பட்டமைக்கான காரணம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சவேந்திர சில்வா தங்கள் தெய்வங்களாக வழிபடும் அனுராதபுரத்தில் உள்ள ஞானாக்காவிற்கும் அவரது தேவாலயத்திற்கும் பாதுகாப்பு வழங்கத் தவறியதே ஷவேந்திர சில்வாவின் பதவி விலகலுக்கான காரணங்களில் ஒன்றாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது, ஞானக்காவின் தேவாலயமும் ஹோட்டலும் தீக்கிரையானது. தேவாலயத்தில் தீ வைக்கப்படும் போது இராணுவப் பிரிவினர் பாதுகாப்பில் இருந்ததாகவும் ஆனால் அவர்கள் அதைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஞானாக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும், மாகாணத்திற்குப் பொறுப்பான 21 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க, ஞானக்காவின் பாதுகாப்பை வழங்கத் தவறியமைக்காக அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
பூஸ்ஸ 61வது பிரிவிற்கு அவர் அனுப்பப்பட்டு 21வது பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் நிஸ்ஸங்க இரியகம அனுராதபுரத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இராணுவ தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வாவும் இதே காரணத்தின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
