உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் பின்னர் உலகளவில் பிரபல்யமான இளைஞன்!(Video)
கானிம் அல்மிப்தாஹ் என்ற கட்டார் இளைஞன்,பிறக்கும்போது அரைவாசி உடம்புடன் பிறந்தவராவார். இருபது வயதான இவர், சிறந்த கல்வியறிவு உடையவராவார்.
இவர் தனது உடல் பற்றியும் தனது எதிர்கால வாழ்க்கை பற்றியும் நம்பிக்கை இழக்கவில்லை,கவலைப்படவில்லை,என்னால் முடியாது என்றிருக்கவில்லை முயற்சித்து வாழ்க்கையில் முன்னேறியுள்ளார்.
தனது கைகளையும் சக்கர நாற்காலியையும் பயன்படுத்தி தனது வாழ்வில் மிகப்பெரும் சாதனைகளைப் படைத்து வருகின்றார்.
தற்போது அவர் கட்டாரில் மட்டுமல்ல உலக அளவில் இன்று பிரபல்யமான ஒருவராக மாறியுள்ளார். உலகமே ஒன்று சேர்ந்து கொண்டாடும் 2022 உலகக்கிண்ணப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ தூதுவராக நியமிக்கப்பட்டார்.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னிலையில் அல்குர்ஆன் வசனத்தை ஓதிக் காண்பித்தார்.
காணொளி ஒன்றில் அவர் பேசுகையில் “என்னை இறைவன் அழகிய தோற்றத்தில்தான் படைத்துள்ளான் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். பொறுமை, பிரார்த்தனை, இறைவனைப் புகழ்தல் போன்றவையே எனது வலிகளுக்கான மருந்துகள்”என கூறியுள்ளார்.
இறைவன் வழங்கிய அழகான உடம்பையும் ஆரோக்கியத்தையும் வீணான விடயங்களில் கழித்து தமது வாழ்வை சீரழிக்கும் பலருக்கு இவர் மிகச்சிறந்த உதாரணமாக இருக்கின்றார்.