யாழிற்கு இரணைமடு நீர் வழங்குவதற்கு யார் தடை! உடைக்கப்படும் உண்மைகள்
யாழ். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இரணைமடு குளத்து நீரை கொண்டு வருவதில் அரசியல் பிரச்சினை இருக்கின்றதென்ற கருத்து நிலவி வருகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், யாழ் மாவட்டத்திற்கு குடிநீர் தரமாட்மோம் என்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள யாரும் ஒருநாளும் கூறியதில்லை, யாழ் மக்கள் அந்தளவிற்கு முட்டாள் தனமாக வாழவில்லை என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கடந்த வருடம் டிசம்பர் 26ஆம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெிவித்திருந்தார்.
அரசியலுக்காக வருபவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம், இரணைமடு குளத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய முடியாது என்றார்.
இந்நிலையில், யாழிற்கு இரணைமடு நீர் வழங்குவதற்கு யார் தடையாக உள்ளார்கள் என்பது தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்த இரணைமடு கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் கமக்காரர் சோதிடர் பரமேஸ்வரன் சுதாகரும், இரணைமடு குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் செயலாளர் எம்.சிவமோகனும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நேரலையானது இலங்கை நேரப்படி இரவு 09.00 மணிக்கும், பிரித்தானிய நேரப்படி மாலை 3.30 மணிக்கும் நடைபெறுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |