மாகாணம் விட்டு மாகாணம் செல்ல யாருக்கு அனுமதி உண்டு? பொலிஸாரின் அறிவிப்பு
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கலாம். இதன்போது உரிய ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,994 ஆக அதிகரித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி, மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த 293 பேரை, அவர்கள் பயணித்த 139 வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri