ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் யாரிடம் உள்ளது? கேள்வியெழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தி
பருப்பு, அரிசி விலையை கட்டுப்படுத்த ஜனாதிபதி இல்லை என்றால், அந்த உரிமையுள்ள அதிகாரி யார் என்பதை கூறுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) கோரியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அப்படியானால், ஜனாதிபதியாக தெரிவானதும், பொதுத்தேர்தலை இலக்கு வைத்து பருப்பு மற்றும் டின் மீன் விலைகளை குறைத்து வர்த்தமானி அறிவித்தலை எந்த நோக்கத்தில் வெளியிட்டீர்கள்.
இதன் பின்னர் எந்த நோக்கத்திற்காக அரசி, சீனி, பருப்பு விலைகளுக்காக 7 வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டீர்கள். இவ்வாறு மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது, அதனை புறந்தள்ளி விட்டு செயற்பட ஜனாதிபதி ஒருவர் தேவையில்லை.
அமைச்சர்கள், அரசாங்கம், ஜனாதிபதி ஆகிய தரப்பினருக்கு அதிகாரம் இல்லை. அந்த அதிகாரத்தை கொண்டவர் வேறு யாருமில்லை, வர்த்தக மாஃபியாக்கள்.
இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக இலங்கையை ஆட்சி செய்வது மக்கள் தெரிவு செய்த ஜனாதிபதியோ, அரசாங்கமோ இல்லை என்று கூறும் நிலைமைக்கு தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அரிசி விலையை கட்டுப்படுத்த எந்தளவுக்கு சட்டத்தை கடுமையாகினாலும் அரசியின் விலைகளை டட்லி சிறிசேன உட்பட வர்த்தக சமூகத்தினரை நிர்ணயித்தனர்.
சமையல் எரிவாயு விலையை லாஃப் கேஸ் நிறுவனம் நிர்ணயித்தது. பால்மாவின் விலையை இறக்குமதியாளர்கள் நிர்ணயித்தனர்.
இந்திய எண்ணெய் நிறுவனமும் தன்னிச்சையான முறையில் எரிபொருள் விலையை அதிகரித்தது.
இப்படியான நிலைமையில், நாட்டு மக்களின் வாழ்க்கை செலவு நிலைமையை கட்டுப்படுத்தும் பொறுப்பு யாரிடம் இருக்கின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri