தனிப்பட்ட தேவைக்காக ஹெலிகப்டர் கொள்வனவு செய்தவர் மைத்திரியின் சகோதரரா?
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஹெலிகப்டர் ஒன்று கொள்வனவு செய்ததாக வெளியான செய்தி போலியாதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொவிட் நிலைமைக்கு மத்தியில் வர்த்தக நடவடிக்கைகள் பலவற்றில் இருந்து தான் வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் 80 லட்சம் ரூபாய் மாத்திரமே நிலையான வைப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஹோட்டலை நிர்மாணிப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் பணம் 850 கோடி ரூபாய் என அவர் குறிப்பிட்டுள்ளார். தான் மிகவும் இலவாக மற்றும் எளிமையான வாழ்க்கை ஒன்றையே வாழ்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹெலிகப்டர் கொள்வனவு செய்ததாக வெளியான செய்தியால் தனக்கு பல தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வருவதா அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெலிகப்டர் என்னுடையதா என அறிந்து கொள்வதற்காக பலர் தொடர்பு கொள்கின்றனர். தற்போதைய நிலைமை அரலிய ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அவ்வளவு வசதியான வாழ வேண்டிய அவசியமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.