இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கோவிட் அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பின் தலைவர்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இலங்கையில் கோவிட் தொற்றுக்கள் அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் ஊடகங்களிடம் உரையாற்றிய அவர் இந்தியாவின் நிலைமை கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவசர தேவைகளை இந்தியா மட்டுமல்ல. நேபாளம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் கோவிட் அதிகரிப்பை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட்டினால் ஏற்கனவே 3.3 மில்லியனுக்கும் அதிகமான உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த நிலையில தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டு முதல் காலத்தை விட மிகவும் ஆபத்தானது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் கலவையுடன் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதே தொற்றுநோயிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 18 மாதங்களில், பரவுதல் முறைகள், தொற்றுநோயியல் போக்குகள், மருத்துவ மேலாண்மை, பராமரிப்பு நோயறிதலின் வளர்ச்சி, சிகிச்சைகள் மற்றும் ஏராளமான தடுப்பூசிகளைப் புரிந்து கொள்வதில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தவிடயத்தில் விஞ்ஞானிகள் மற்றும் நெறிமுறை வல்லுநர்களும் ஆராய்ச்சி மிக்க உயர்ந்த நெறிமுறை தரத்திற்கு ஏற்ற வகையில் பணியாற்றியுள்ளனர் என்றும் உலக
சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam