வெள்ளை வேன் சந்தேக நபர் அதே வேனில் கடத்தப்பட்டமையால் பரபரப்பு
சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் வழக்கின் அரசாங்கத்தின் இரண்டாவது சாட்சியாளரான அத்துல சஞ்சீவ மதநாயக்க வெள்ளை வேனில் கடத்தப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5ஆம் திகதி களனி பெத்தியகொடவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் வைத்து சிலரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு வேனில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் காயமடைந்த அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துல சஞ்சீவ கடத்தப்பட்ட வேன் பியகம பட்டிய சந்தி பகுதியில் சுமார் 02 மணிநேரம் நிறுத்தப்பட்டிருந்தது.
பின்னர், அந்த இடத்தில், அவரை வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு வாகனம் மீண்டும் முன்னோக்கி நகர்வது, அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
